சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

இந்த சீசனை சிறப்பான முறையில் தொடங்கியது. தனது தொடக்க ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இதன் பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. கடைசியாக மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தொடக்க ஆட்டத்தைத் தவிர மற்ற3 ஆட்டங்களிலும் டெல்லி அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் கடும் பின்னடைவை சந்தித்தது.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில்டெல்லி அணி ரிஷப் பந்த், ஷிகர் தவண் விக்கெட்டை இழந்ததும் ஆட்டம் கண்டது. இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி

ஓவரில் 6 ரன்களை கூட சேர்க்க முடியாமல் சூப்பர் ஓவர் வரைபோட்டியை இழுத்துச் சென்றது. ரபாடாவின் அசாத்தியமான யார்க்கர்களால் மட்டுமே அந்த ஆட்டத்தில் டெல்லியால் வெற்றி பெற முடிந்தது.

அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றியின் விளிம்பில் இருந்த சூழ்நிலையில் கடைசி 7 விக்கெட்களை வெறும் 8 ரன்களுக்கு பறிகொடுத்து வெற்றியை பஞ்சாப் அணியின் கைகளில் தாரைவார்த்தது. அந்த ஆட்டத்தில் 144 ரன்கள் வரை 3 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த டெல்லி அணி 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி கண்டிருந்தது.

எனவே முக்கியமான தருணங்களில் பதற்றமின்றி நிதானமாக விளையாடி வெற்றி பெறும் கலையை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது டெல்லி அணி. பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் 78 ரன்கள் விளாசிய ரிஷப் பந்த், மீண்டும் மட்டையை சுழற்றக்கூடும். பிரித்வி ஷா, ஷிகர்தவண், ஸ்ரேயஸ் ஐயர், காலின்இங்க்ராம் ஆகியோரும் கணிசமானஅளவில் ரன்கள் சேர்ப்பது அவசியம்.

தொடரை தோல்வியுடன் தொடங்கிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து இரு வெற்றிகளின் மூலம் உற்சாகம் அடைந்துள்ளதுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய டேவிட் வார்னர் (100), ஜானி பேர்ஸ்டோ ஜோடியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இந்த சீசனில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ (114) ஜோடி 3 ஆட்டங்களிலும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து மிரளச் செய்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிராக 118 ரன்களும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 110 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக 185 ரன்களையும் இந்த ஜோடி வேட்டையாடியிருந்தது. எனவே இந்த கூட்டணி டெல்லி அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ரபாடா, கிறிஸ் மோரிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான சந்தீப் லமிசான் ஆகியோருக்கு கடும் சவால் தரக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொகமது நபி, ரஷித் கான் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேகப் பந்து வீச்சில் 4 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள சந்தீப் சர்மா நம்பிக்கை அளிப்பவராக உள்ளார்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வழங்குவது மட்டுமே அணிக்கு சற்று கவலையை கொடுக்கிறது. அவர்,மீண்டும் பார்முக்கு திரும்பும்பட்சத்தில் ஹைதராபாத் அணி அதீத பலம் பெறும்.

Pages